கட்டுரைகள்

பெயரும் புகழும்

அன்று என் பேரன் என்னை என் பெயரிட்டு கூப்பிட்டதை கேட்டதும் அவன் பெற்றோர் கடிந்துகொண்டனர், பாட்டியை பெயர் சொல்லி கூப்பிட கூடாது என்று. பெயர் சொல்லிக் கூப்பிட்டால் அவமரியாதை என்பது நம் கருத்து.

பிரபா ஸ்ரீதேவன்

அன்று என் பேரன் என்னை என் பெயரிட்டு கூப்பிட்டதை கேட்டதும் அவன் பெற்றோர் கடிந்துகொண்டனர், பாட்டியை பெயர் சொல்லி கூப்பிட கூடாது என்று. பெயர் சொல்லிக் கூப்பிட்டால் அவமரியாதை என்பது நம் கருத்து.

"பூவண்ணா', "பிஸ்மில்லா', "பித்தா', "மரியே' என்றெல்லாம் பிரார்த்தனை செய்கிறோம், மரியாதை குறைவினாலா, இல்லை அளவிடமுடியாத பக்தி கலந்த அன்பாலா?

பெயரிட்டு அழைப்பதனால் மட்டும் நாம் மரியாதையை அளக்க முடியுமா? பெயரிட்டு அழைப்பது தெய்வத்திற்கே பிடிக்கிறது என்பதால்தானே எல்லாரும் ஆயிரம் பெயர் சொல்லி போற்றி போற்றி என்கிறார்கள்.

முன்பு மரியாதை நிமித்தம் கணவர் பெயரை சொல்லக்கூடாது. இவங்க, இவர், அத்தான், மாமா என்பது போன்ற சொற்கள் பயன்பட்டன. பெயரைச் சொன்னால் அவர் ஆயுள் குறைந்துவிடும் என்று அச்சுறுத்தினார்கள். மனைவியிடம் மரியாதை தேவையில்லை என்று அங்கேயே நிர்ணயிக்கப்பட்டது. அவள் ஆயுள் குறைந்தாலும் போகட்டும். இன்னொரு பெண், இன்னொரு மனைவி.

பிறகு ஒரு காலத்தில் சிலர் கணவரை விளிக்கும்பொழுது பெயர் சொல்லாமல் அவரைப்பற்றி பேசும்பொழுது மட்டும் பெயரை குறிப்பிட்டார்கள். பிறகு நேராக கூப்பிடவும் ஆரம்பித்தார்கள். இதனாலேயே கணவன்-மனைவி பரஸ்பர அன்பும் மரியாதையும் குறைந்துவிட்டது என்று நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். இப்பொழுது பலர் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். இருவரும் வீட்டு வேலையை - குறிப்பாக தங்கள் குழந்தை வளர்ப்பை - பகிர்ந்துகொள்கிறாரர்கள். எல்லாவற்றிற்கும் கடந்த காலம் தான் பொற்காலம் என்று சொல்ல முடியாது.

பொதுவாக ஒருவர் பெயரை வைத்து அவர் எந்த ஊர் எந்த சாதி என்று கூட முன்பு சொல்லமுடியும். குலதெய்வத்தின் பெயர், முன்னோர்களின் பெயர் வைப்பார்கள். இப்பொழுது மாறிவிட்டது. புதுப்புது புரியாத பெயர்கள். நல்ல தமிழ் பெயர்கள் அல்லது ஷ் என்ற சொல் கட்டாயமாக இருக்கும் பெயர்கள்.

இதில் எண் கணிதம் படுத்தும் பாடு வேறு. இதனால் பல தெரிந்த பெயர்கள் நம் வழக்கத்தில் இருந்து மறைந்தாலும் ஒரு விதத்தில் நல்லது என்றே தோன்றுகிறது. பெயரிலிருந்து பிரிவு வருவதாவது நிற்கலாம்.

பல குழந்தைகள் இறந்து பிறந்தால் அதன்பின் பிறந்த குழந்தைக்கு வேம்பு அல்லது பிச்சை போன்ற பெயர் வைப்பார்களாம். காலன் அந்தப் பெயரைக்கண்டு ஓ இந்தக் குழந்தையை நாம் அண்டக்கூடாது என்று நினைப்பான் என்று ஒரு நம்பிக்கை. பெயரை வைத்து ஏமாற்றி விடலாம் போலிருக்கிறது.

பெண்கள் பெயரை குறிப்பிடுவதில் ஒரு சுவையான திருப்பம். முன்பெல்லாம் என்னைக் குறிப்பிடுவதானால் பிரபா அம்மாள் என்று சொல்லியிருப்பார்கள். பின்னொரு காலத்தில் எஸ். பிரபா என்று மாறியிருப்பேன். அதற்கு பின் பிரபா ஸ்ரீதேவன். இப்பொழுது ஆங்கில பத்திரிகைகளில் நான் ஜஸ்டிஸ் ஸ்ரீதேவன்.

எப்படி மாற்றம் என்று கேட்கலாம். கணவருடன் ஒன்றானார் என்று சொல்லலாம். ஆனால் நம் பெயர் நம்மை அடையாளம் காட்டுகிறது என்றால் அது அழிந்தது அல்லவா? இது ஆண்களுக்கு நடப்பதில்லை. யோசித்துப் பார்த்தால் நம் வாழ்வு முறையே யார் முக்கியம் யார் இல்லை என்று சொல்லாமல் சொல்லும்.

புனைப் பெயர்கள் என்பது மற்றும் ஒரு சுவாரசியமான அம்சம். அந்த பெயர்களை எழுத்தாளர்கள் எப்படித் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று நம் நாட்டில் ஏதேனும் ஆய்விருக்கிறதா என்று தெரியவில்லை. மனைவி பெயர், மனைவி பெயருடன் தன் பெயர் இவை சில உதாரணங்கள்.

சிலர் தங்கள் பெயரையும் இனிஷியலையும் இணைத்துள்ளார்கள். வடமொழியில் உள்ள பெயரை தமிழாக்கி அதைப் புனைப் பெயராகக் கொண்டவர்களும் உண்டு. இரு பெயரில் எழுதி சொந்த பெயரை இலக்கிய நடைக்கும் புனைபெயரை இன்னொரு நடைக்கும் தேர்ந்தெடுத்தவரும் உண்டு. எழுத்தாளர்கள் மட்டும் அல்ல திரையுலகிலும் அசல் பெயரை மாற்றி வேறு பெயரை வைத்துக்கொள்வது என்பது சகஜம்.

மற்றும் ஒரு பெயர் செல்லப் பெயர். சிலருடைய செல்லப் பெயரே நினைவில் தங்கி சுயப்பெயரை நாம் மறப்பதும் உண்டு. வடநாட்டில் இந்த செல்லப்பெயர் மிக பிரபலம். பிண்டு, சிக்கு, பச்சூ போல பல பெயர்கள். ராஜ்கபூரின் மூத்த மகனுக்கு ரணதீர் என்று வீரமிகு பெயர் இருந்தும் டப்பூ என்றே அவரை அழைக்கிறார்கள்.

நம் தமிழ்நாட்டில் பெயர் சொன்னால் அவமரியாதை என்ற எண்ணம் ஆழமாக பதிந்துள்ளது. இந்த சிக்கலை எப்படி தீர்க்கிறோம் என்றால் ஒன்று அவரின் பெயரை சுருக்குவது. உதாரணம் பி.கே., சி.பி. அல்லது அவருக்கு நாம் ஒரு அடைமொழி பெயரைச் சூட்டி மகிழ்ந்து பின் அந்த அடைமொழிப்பெயரால் மட்டும் அழைப்பது.

நம் பெற்றோர் ஏன் உற்றார் உறவினரை அழைத்து நமக்கு சின்னஞ்சிறு திலகம் வைத்து சிங்காரமாய் புருவம் தீட்டி நமக்கு பெயரிட்டார்கள்? அவர்கள் நமக்கு வைத்த பெயர் என்ன ஆவது?

இறுதியாக சட்டத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் ஒரு ரகத்திற்கு வருவோம். இதுதான் வணிகச்சின்னம் (பழ்ஹக்ங் ஙஹழ்ந்) இது வணிக சம்பந்தமாக குறிப்பிடப்படும் ஒரு சின்னம் அல்லது பெயர். இது ஒரு வித அறிவுசார் சொத்து.

ஒருவருடைய வணிகப்பெயரையோ சின்னத்தையோ மற்றவர் உபயோகித்தால் பெரும் செலவில் வழக்குகள் நடக்கும். இந்த பெயரை தேர்ந்தேடுப்பதில் பல வரைமுறைகள் உள்ளன. உயர்ந்த, சிறந்த என்பது போன்ற சொற்களை வணிகசின்னமாக வைத்துக்கொள்ள முடியாது. அதாவது எங்கள் அருகம்புல் சோப் உயர்ந்த சோப் என்று சொல்லலாம். இங்கு அருகம்புல் என்ற சொல் தான் வணிகச்சின்னம். உயர்ந்த என்பது வெறும் மார் தட்டுதல்.

நாம் தயாரிக்கும் சோப்பிற்கு உயர்ந்த என்ற பெயர் வைக்ககூடாது. இது போன்ற சின்னம் சொற்கள் வணிகக்குறியாக ஏற்றால் அது நம் சொத்தாக பதியப்படும் என்று நம் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அதற்கு ஒரு தனித்துவம் இருக்க வேண்டும். ஆபாசச் சொற்கள் இருக்ககூடாது. மத உணர்வுகளைப் புண்படுத்தும் சொல்லாக, சின்னமாக இருக்ககூடாது என்றெல்லாம் கூறப்பட்டிருக்கிறது.

வணிகச்சின்னங்கள் நமக்கு குழப்பம் ஏற்படுத்தவோ நம்மை ஏமாற்றவோ கூடாது என்றும் சட்டம் சொல்கிறது.

பால்சிகோ (ஊஹப்ஸ்ரீண்ஞ்ர்) என்ற மருந்தை விற்கும் நிறுவனத்திற்கும் பால்சிடாப் (ஊஹப்ஸ்ரீண்ற்ஹக்ஷ) என்ற மருந்தை விற்கும் நிறுவனத்திற்கும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்தது (இஹக்ண்ப்ஹ ஏங்ஹப்ற்ட்ஸ்ரீஹழ்ங் கண்ம்ண்ற்ங்க் ஸ்ள் இஹக்ண்ப்ஹ டட்ஹழ்ம்ஹஸ்ரீங்ன்ற்ண்ஸ்ரீஹப்ள் கண்ம்ண்ற்ங்க் - 2001).

அந்த தீர்ப்பில் முக்கியமாக கூறப்பட்டது என்னவென்றால், இது போன்ற வழக்குகளில் பொது நலனை கருத்தில் கொள்ளவேண்டும். அதுவும் மருந்துகளின் பெயர்களில் குழப்பம் ஏற்பட்டால் உயிருக்கே அபாயம் ஏற்படலாம் என்பதுதான்.

இது போலவே டைகர் பாம் தயார் செய்யும் அயல்நாட்டு நிறுவனம் டைகர் பாம் என்ற பெயரை வேறு யாரும் தங்கள் தயாரிப்புக்கு வைக்ககூடாது என்று டைகர் பாம் கம்பெனி என்ற இந்திய நிறுவனத்தின் பேரில் வழக்கு தொடுத்தது (ஏஹஜ் டஹழ் ஆழ்ர்ள். ஐய்ற்ங்ழ்ய்ஹற்ண்ர்ய்ஹப் கற்க். ஸ்ள் பண்ஞ்ங்ழ் ஆஹப்ம் இர். (ட) கற்க். அய்க் ஞழ்ள். - 1995). நம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வெற்றியும் கண்டது.

அப்பொழுது வெளிநாட்டுப் பொருள்கள் இங்கு எளிதாக கிடைக்காது. இருந்தும் கடல் கடந்து அதன் புகழ் இங்கு பரவியுள்ளது என்றும் இங்குள்ள நிறுவனத்தின் நோக்கம் ஏமாற்றுவது என்றும், தன் பொருளை அசல் டைகர் பாம் என்று தள்ளிவிடுவதுதான் அதன் நோக்கம் என்றும் தீர்ப்பளித்தது.

பிரச்னைக்குரிய இரு சின்னங்களில் எது முதலில் ஏற்கப்பட்டது என்று பார்ப்பார்கள். தலப்பாக்கட்டி என்ற வணிகசின்னத்திற்கும் தலப்பாக்கட்டு என்ற வணிகசின்னத்திற்கும் பிரியாணி பெயர் பற்றி வழக்கு நடந்தது.

அம்பாள் என்ற வணிகச்சின்னத்திற்கும் ஆண்டாள் என்ற சின்னத்திற்கும் பலத்த சண்டை நடந்தது (ஓ.த. இட்ண்ய்ய்ஹ ஓழ்ண்ள்ட்ய்ஹ இட்ங்ற்ற்ண்ஹழ் ஸ்ள் நழ்ண் அம்க்ஷஹப் இர்., ஙஹக்ழ்ஹள் அய்ழ்).

நமக்கு தோன்றும் இந்தப் பெயர்களில் என்ன குழப்பம் என்று. ஆனால் 1969இல் உச்சநீதிமன்றம் குழப்பம் ஏற்படும் என்று தீர்ப்பளித்தது. ஏனென்றால், அந்த பெயரில் விற்கப்பட்ட அம்பாள் மூக்குபொடியும் ஆண்டாள் மூக்குப்பொடியும் தமிழ் மாநிலத்தில் மட்டும் இல்லாமல் இந்தியா எங்கும் விற்பனை ஆகிறது என்றும், ஹிந்துக்கள் மட்டும் வாங்குவதில்லை. ஆகவே குழப்பம் ஏற்படும் என்றும் சொல்லி அம்பாள் கட்சிக்கு சாதகமாக தீர்ப்பளித்தது.

ஆயுள் ஆயுஸ் ஆயுர் என்பது போன்ற சொற்களை தானன்றி வேறு யாரும் தனியாகவோ வேறு சொற்களுடன் கூட்டாகவோ உபயோகிக்கூடாது என்று கூட வழக்குகள் இருந்துள்ளன. இந்த சின்னங்களுக்கு சந்தையில் மதிப்பு உண்டு. ஆகவேதான் சண்டை.

"என்ன பேரு வைக்கலாம், எப்படி அழைக்கலாம்' என்று ஒரு பாட்டு வரும். ஹிட்லரின் பெயர் முதலில் ஷிக்கல்க்ருபர் என்று இருந்ததாம். ஷிக்கல்க்ருபர் ஹிட்லரைப்போல உலகை கதிகலங்க அடித்திருக்கமுடியுமா என்று சிலர் யோசித்துள்ளார்கள்.

ஆனால் ஷேக்ஸ்பியரோ ரோஜாவை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் மணக்கும் என்கிறார். பெயர் வைக்குமுன் சிந்திக்க நிறைய நொடி தேவை என்று தோன்றுகிறது.

கட்டுரையாளர்: உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT