கட்டுரைகள்

தாடி, மீசையுடன் கரடுமுரடாக இருக்கும் ஆண்களைத் தான் பெண்களுக்கு ரொம்பப் பிடிக்குதாம்: புதிய ஆய்வு முடிவு!

DIN

லண்டனில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தாடி, மீசை வைத்திருக்கும் ஆண்களைத் தான் பெண்கள் அதிக கவர்ச்சிகரமானவர்களாக கருதுகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.    

‘களிடென்’ என்னும் ஒரு டேட்டிங் தளத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 76% பெண்கள் கரடுமுரடான தோற்றத்துடன் தாடி, மீசை வைத்துள்ள ஆண்களால் கவர்ந்திழுக்கப் படுவதாக தெரிவித்துள்ளனர். அதே சமயம் 53% பெண்கள் சுத்தமான ‘கிளீன் ஷேவ்’ செய்த ஆண்களைப் பிடித்திருப்பதாக கூறியுள்ளனர்.

வெளிநாட்டில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 6,000 பெண்களிடம் ஆய்வு நிறுவனம் “என்றாவது தாடி, மீசை வைத்திருக்கும் ஆணால் கவரப்பட்டு உங்களது காதலரை ஏமாற்றி இருக்கிறீர்களா?” என்கிற தனிப்பட்ட கேள்வியை எழுப்பினர். அதற்கு அதிர்ச்சியூட்டும் விதமாக 61% பெண்கள் ஆம், தங்களது துணையை தாடி, மீசை வைத்திருக்கும் ஒரு ஆணிற்காக தாங்கள் ஏமாற்றியிருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளனர். 

தாடி, மீசை வைத்திருக்கும் ஆண்களை 41% பெண்கள் கவர்ச்சி மற்றும் கம்பீரமானவர்களாகவும், 29% பெண்கள் அழகு மற்றும் உண்மையானவர்களாகவும், 17% பெண்கள் அவர்களுடன் இருப்பது கூடுதல் பாதுகாப்பைத் தருவதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு முடிவைப் பொருத்தவரை பெரும்பாலான பெண்கள் தாடி, மீசையை ஆணுக்கான ஒரு அடையாளமாகக் கருதுவதாக தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT