சிறப்புக் கட்டுரைகள்

உத்தரப் பிரதேசம் இனி தூய்மைப் பிரதேசமாகிறது!

தினமணி

பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுத்த 'ஸ்வச் பாரத்' திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்து, உத்தரப் பிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் சில திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இதன் முதல் கட்டமாக உத்தரப் பிரதேச காவல் நிலையங்களில் போலீஸ்காரர்களின் கையில் துப்பாக்கிப் பதிலாக துடைப்பங்கள் இருந்தன.

ஸ்வஜ் பாரத் திட்டத்தை நிறைவேற்றும் பொருட்டு லக்னோ காவல் நிலையத்தில் இன்று காலை தங்கள் வளாகத்தை சுத்தப்படுத்தும் துப்புரவுப் பணிகளில் அங்கு பணிபுரியும் போலீஸ்காரர்களே ஈடுபட்டனர்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் எல்லா காவல் நிலையங்களிலும் தூய்மை பணிகள் நடக்க வேண்டும் என்று முதல் அமைச்சர் உத்தரப் பிரதேச போலீஸ் நிலையங்களுக்கு ஒரு ஆணை அனுப்பியதன் பின் விளைவே இது.

தற்போது உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியில் இருக்கும் பிஜேபி கட்சியினர் பிரதமர் மோடி 2014-ல் அறிமுகப்படுத்திய திட்டமான ஸ்வச் பாரத் இயக்கத்தை முழுமையாக வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற உறுதியில் இவ்வாறு களத்தில் இறங்கியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT