சிறப்புக் கட்டுரைகள்

குடியரசு தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்கும் டிவிட்டர்! புதிய ஈமோஜி அறிமுகம்!!

வி. உமா

குடியரசு தினத்தன்று டிவிட்டர் நிறுவனம் 'இந்தியா கேட்' வடிவில் ஒரு புதிய ஈமோஜியை அறிமுகப்படுத்தி உள்ளது. குடியரசு தின விழா கொண்டாட்டத்திற்கு சில நாட்கள் முன்னதாகவே இந்த ஈமோஜியை ட்விட்டர் வெளியிட்டுள்ளது. இந்த ஈமோஜி ஜனவரி 29-ம் தேதி வரை நீடிக்கும்.

'இந்தியா கேட்'டின் சிறப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஈமோஜி ஒன்பது மொழிகளில்  தட்டச்சு செய்யும் போது கிடைக்கிறது.

இது குறித்து டிவிட்டர் இந்தியாவின் அரசுத் தொடர்பு பொது கொள்கை தலைவர் மஹிமா கவுல் கூறுகையில், 'இந்தியா கேட் எனும் பிரத்யேகமான இந்த ஈமோஜியைக் கொண்டு டிவிட்டர் இந்தியா, குடியரசு தினக் கொண்டாட்டத்தில் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. மேலும் குடியரசு தினம் பற்றிய உரையாடல்களை சமூக வளைத்தளங்களில் பகிரப்படும் போது இந்த ஈமோஜியை இணைகையில் அது தேசிய ஒற்றுமையை நினைவூட்டும் ஒரு சின்னமாகத் திகழும்’ என்றும் கூறினார்.

ஆண்டுதோறும் குடியரசு தின அணிவகுப்பு துவங்குவதற்கு முன்னதாக, பிரதம மந்திரி இந்தியாவின் நுழைவாயிலுக்கு வருகை தந்து ஒவ்வொரு வருடமும் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதன் குறியீடாக 'இந்தியா கேட்' ஈமோஜி வடிவமைப்பு உள்ளது.

குடியரசு சிறப்பு கொண்டாட்டங்களையும் வாழ்த்துக்களை பதிவு செய்யும் விதமாக நீங்கள் டிவிட்டர் பதிவுகளை உருவாக்கும் போது புதிய ஈமோஜியைப் பயன்படுத்துங்கள். இதற்கு நீங்கள் #RepublicDay, #HappyRepublicDay மற்றும் # RepublicDay2018 ஆகிய ஹாஷ் டேக்குகளைப் பயன்படுத்தலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

SCROLL FOR NEXT