கல்வி

எஸ்சி, எஸ்டி, மாணவர்கள் உதவித்தொகை பெறுவது எப்படி?

எஸ்சி, எஸ்டி, பிரிவினரை சேர்ந்த மாணவர்கள் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பின், பல்வேறு உதவித்தொகைகளை திராவிட நலத்துறை வழங்கப்பட உள்ளது.

தினமணி

எஸ்சி, எஸ்டி, பிரிவினரை சேர்ந்த மாணவர்கள் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பின், பல்வேறு உதவித்தொகைகளை திராவிட நலத்துறை வழங்கப்பட உள்ளது.

BRIGHT STUDENTS AWARD

பத்தாம் வகுப்பில் மாவட்டத்திலியே முதல் மாணவராக வருபவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இவ்விருதினை ஆதி திராவிட நலத்துறை இயக்குனர் வழங்குவார்.

PRIZE MONEY AWARD

முதல் அமர்வில் எல்லா பாடங்களிலும் 60 சதவீத மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

STATE SCHOLARSHIP

மாநில அளவில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மேற்படிப்பு படிக்க இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

POST MATRIC SCHOLARSHIP

மேல்நிலை முதல் ஆண்டு, இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை அளிக்கப்படுகிறது. விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களும் உதவித்தொகையை பெறலாம்.

கட்டண விலக்கு:

அரசு/அரசு மானியம் பெறும் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு, அக்கல்வி நிலையத்திற்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணங்களிலிருந்து விலக்களிக்கப்படுகிறது. சுயநிதி கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையுடன் இவ்வுதவித்தொகை வழங்கப்படுகிறது.

SPECIAL LOAN

விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு இந்த உயர் கல்வி சிறப்பு உதவித்தொகையை அளிக்கிறது. அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் 7000 மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

வருமான வரம்பு:

உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவ மாணவியரின் பெற்றோர்/பாதுகாவலர்களின் ஆண்டு வருமானம் ரூ.50,000க்கும் அதிகமாக இருக்க கூடாது.

உதவித்தொகை:

பட்டப் படிப்பு - ரூ.6,500 - ரூ.7,000

தொழிற் படிப்பு - ரூ.7,000

மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 75 சதவீத மானியமாகவும் 75 சதவீத கடனாகவும் வழங்கப்படுகிறது.

எங்கே விண்ணப்பிப்பது?

மாணவர்கள் பயிலும் கல்வி நிலையத்திலியே விண்ணப்பங்கள் கிடைக்கும். முதல்வர் / இயக்குநர் மூலம் மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

SCROLL FOR NEXT