தியாகராசா பள்ளியில் 29-வது ஆண்டு விழா
ஸ்ரீவில்லிபுத்தூர், கீழப்பட்டி சாலியர் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட தியாகராசா மேல்நிலைப் பள்ளியின் 29-வது ஆண்டு விழா புதன்கிழமை பள்ளிச் செயலாளர் சி.காளிமுத்து தலைமையில் நடைபெற்றது.
கல்விதியாகராசா பள்ளியில் 29-வது ஆண்டு விழா
ஸ்ரீவில்லிபுத்தூர், கீழப்பட்டி சாலியர் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட தியாகராசா மேல்நிலைப் பள்ளியின் 29-வது ஆண்டு விழா புதன்கிழமை பள்ளிச் செயலாளர் சி.காளிமுத்து தலைமையில் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர், கீழப்பட்டி சாலியர் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட தியாகராசா மேல்நிலைப் பள்ளியின் 29-வது ஆண்டு விழா புதன்கிழமை பள்ளிச் செயலாளர் சி.காளிமுத்து தலைமையில் நடைபெற்றது.
பள்ளித் தலைவர் பொ.உமையொருபாகம், ஊர்த் தலைவர் கே.ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உதவித் தலைமை ஆசிரியை பா.ராஜேஸ்வரி வரவேற்றார். தலைமை ஆசிரியர் நா.முருகன் ஆண்டறிக்கை வாசித்தார்.
கல்வி மற்றும் விளையாட்டில் சிறப்பிடம் பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கி, கலசலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் க.ஸ்ரீதரன் சிறப்புரையாற்றினார்.
மாணவ மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பெற்றோர் மற்றும் ஊர் மக்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் மா.வை.சோமசுந்தரம் நன்றி கூறினார்.