கொரிய பல்கலை.யுடன் கலசலிங்கம் பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம்
கொரியா நாட்டில் உள்ள யுங்காம் பல்கலைக்கழகத்துடன், விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
கல்விகொரிய பல்கலை.யுடன் கலசலிங்கம் பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம்
கொரியா நாட்டில் உள்ள யுங்காம் பல்கலைக்கழகத்துடன், விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
கொரியா நாட்டில் உள்ள யுங்காம் பல்கலைக்கழகத்துடன், விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் ஆட்டோமொபைல் துறைத் தலைவர் எம்.உதயகுமார், கொரியா, யுங்காம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு, தற்போதைய புதிய முறை உற்பத்தி உருவாக்கும் முறைகள் குறித்தும் இதற்கான கணினி முறை இயந்திரவியல் குறித்தும் விளக்கினார்.
யுங்காம் பல்கலைக்கழகத்தின் இயந்திரவியல் துறை டீன் டாய்ஜோ கோ விடம் கலந்துரையாடினார். மேலும் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் ஆட்டோமொபைல் துறையின் புதிய ஆராய்ச்சி குறித்தும் பரிமாற்றம் செய்து கொண்டார்.
மேலும் கலசலிங்கம் மாணவர்கள் தங்களது ஒரு பருவத்தை, யுங்காம் பல்கலைக்கழகம் சென்று படிப்பதற்கும் ஆராய்ச்சி செய்வதற்கும் இரு பல்கலைக்கழகங்களும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.கொரியா சென்று திரும்பிய பேராசிரியர் உதயகுமாரை, பல்கலைக்கழக்ததின் வேந்தர் க.ஸ்ரீதரன், இயக்குநர் டாக்டர் சசி ஆனந்த், துணை வேந்தர் ச.சரவணசங்கர், பதிவாளர் வெ.வாசுதேவன் ஆகியோர் செவ்வாய்கிழமை பாராட்டினர்.