கல்வி

பத்தாம் வகுப்பு: பிப்ரவரி 20 முதல் 28 வரை அறிவியல் பாட செய்முறைத் தேர்வு

DIN

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்களுக்கு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு பிப்ரவரி 20 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விரைவில் நடைபெறவுள்ளது.
இதற்கு விண்ணப்பித்த நேரடித் தனித் தேர்வர்கள், ஏற்கெனவே அறிவியல் பாட செய்முறைத் தேர்வு எழுதி தேர்வு பெறாதவர்கள், மேற்குறிப்பிட்ட நாள்களில் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
இந்தத் தேர்வு குறித்து அறிவியல் செய்முறைப் பயிற்சி பெற்ற பள்ளியிலிருந்து அறிவிப்பு கிடைக்காத தனித் தேர்வர்கள், இதையே தகவலாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இது குறித்து செய்முறைத் தேர்வு நடைபெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர், மாவட்ட கல்வி அலுவலரை அணுகி விவரங்களை அறிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT