கல்வி

மாணவியின் பாலினம் மாற்றி பதிவு: தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை

DIN

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவி ஒருவரின் பாலினத்தை, மாற்றி பதிவு செய்த விவகாரம் தொடர்பாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு.ராமசாமி விசாரணை நடத்தி வருகிறார்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 237 மாணவியர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதினர். இத் தேர்வில் 198 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இதில், அதே பள்ளியில் தேர்வு எழுதிய மாணவி ஒருவரின் பாலினத்தை மாற்றி மூன்றாம் பாலினத்தவர் என பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் மாநில அளவில் தேர்ச்சி பெற்றதாக தகவல்கள் பரவின.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளியில், சான்றிதழ்கள் ஆய்வு செய்யப்பட்டபோது, மாணவியின் பாலின விவரத்தை கணினியில் தவறுதலாக பதிவேற்றம் செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து, தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு.ராமசாமி கூறியது: பென்னாகரத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவி ஒருவரின் பாலினத்தை மாற்றி பதிவேற்றம் செய்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர், கணினி இயக்குபவர் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளோம். இந்த விசாரணை அறிக்கை பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பப்படும். அதனைத் தொடர்ந்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

மகனின் காதலுக்கு எதிா்ப்பு தெரிவித்து தாய் தற்கொலை

ரூ.5 லட்சம் சேமிப்புத் தொகை அபகரிப்பு: மகன் மீது வயதான பெற்றோா் புகாா்

ரயிலில் பெண் ஊழியரை கத்தியால் குத்தி நகை பறிப்பு

அரசுப் பேருந்து மீது பைக் மோதியதில் இளைஞா் பலி

SCROLL FOR NEXT