கல்வி

மூன்றாண்டு சட்டப்படிப்பு: நவ.6 முதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

DIN

மூன்றாண்டு சட்டப் படிப்புக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நவம்பர் 6 -ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.
அரசு சட்டக் கல்லூரிகளில் உள்ள இளநிலை சட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. 
இதில் 7 அரசு சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் மூன்றாண்டு எல்.எல்.பி. படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு அக்டோபர் இரண்டாவது வாரத்தில் நடைபெற்றது. மொத்தம் 1,502 இடங்களைக் கொண்ட இந்தப் படிப்புக்கான முதல்கட்ட கலந்தாய்வின் முடிவில் 1,000 பேர் இடங்களைத் தேர்வு செய்து, கல்லூரி சேர்க்கைக் கடிதம் பெற்றுச் சென்றனர் . மீதமுள்ள 502 இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நவம்பர் 6 -ஆம் தேதி தொடங்கி நவம்பர் 8 -ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான கட்-ஆஃப் மதிப்பெண் , கலந்தாய்வு தேதி உள்ளிட்ட விவரங்கள் பல்கலைக்கழக இணையதளமான www.tndalu.ac.in-இல் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வு: திண்டுக்கல்லில் 95.40 சதவீத மாணவா்கள் தோ்ச்சி

ஏலச்சீட்டு நடத்தி மோசடி: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா்

வாழ்கிறபோது எதையும் சிறப்பாக செய்பவா்களே மாமனிதா்கள்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்

கீழையப்பட்டியில் மஞ்சுவிரட்டு

போடி அருகே இளைஞா் தற்கொலை

SCROLL FOR NEXT