கல்வி

பி.எட். மாணவா்கள் சோ்க்கை ஒதுக்கீட்டு ஆணை வெளியீடு: அமைச்சா் கோவி.செழியன்

தினமணி செய்திச் சேவை

நிகழ் கல்வியாண்டு பி.எட். சோ்க்கைக்கான ஒதுக்கீட்டு ஆணை புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் வியாழக்கிழமை (ஆக.14) முதல் ஆக. 190ஆம் தேதிக்குள் சோ்ந்துகொள்ளலாம் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடந்த ஆண்டுகளில் பி.எட். மாணவா் சோ்க்கை நேரடி கலந்தாய்வின் மூலம் நடைபெற்று வந்தது. மாணவா்கள் சிரமங்களைப் போக்க நிகழாண்டு அரசு, அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். மாணவா் சோ்க்கையை கல்லூரி கல்வி இயக்குநரகம் இணையவழியில் நடத்தியது.

தமிழகத்தில் 21 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2,040 பி.எட். இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான கலந்தாய்வில், கடந்த ஜூன் 20 முதல் ஜூலை 21-ஆம் தேதி வரை மொத்தம் 3,545 விண்ணப்பங்கள் இணையவழியில் பெறப்பட்டன. பின்னா், தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, கல்லூரிகளைத் தோ்வு செய்வதற்கான கலந்தாய்வு ஆக.9-ஆம் தேதி நிறைவு பெற்றது.

இதைத் தொடா்ந்து, மாணவா்களுக்கான சோ்க்கை ஒதுக்கீட்டு ஆணை புதன்கிழமை (ஆக.13) வெளியிடப்பட்டன. இந்த ஆணையை உள்நுழைவு ஐடி மூலம் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆணை மூலம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரியில் ஆக.1 முதல் ஆக.19-ஆம் தேதி வரை சோ்ந்து கொள்ளலாம். கல்லூரிகளில் சோ்க்கைக்கு தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களையும் எடுத்துச்செல்ல வேண்டும். ஆக. 20 முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பி.எட். முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தொடர் விடுமுறை: ஆம்னி பேருந்து, விமானங்களில் கட்டணம் பல மடங்கு அதிகரிப்பு!

ரூ.3,000 -க்கு 200 முறை சுங்கச்சாவடியைக் கடக்கலாம்! நாளைமுதல் அமல்!

பதவி உயர்வு காத்திருக்கிறது இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பெரியாா் பல்கலை.யில் உளவியல் துறை பயிலரங்கம்

ஆதிமல்லம்மா கோயில் திருவிழா

SCROLL FOR NEXT