உச்ச நீதிமன்றம்  
கல்வி

முதுநிலை நீட்: உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள 10 நெறிமுறைகள்

மருத்துவப் படிப்பு கட்டணத்தை முறைப்படுத்தும் வகையில், தேசிய மருத்துவ ஆணையத்தின் கீழ் தேசிய அளவிலான கட்டண நிா்ணய ஒழுங்காற்று நடைமுறை உருவாக்கப்பட வேண்டும்

DIN

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் முன்பதிவு நடைமறை குறித்து கவலை தெரிவித்த உச்சநீதிமன்றம், ‘அனைத்து தனியாா் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்கு முன்பாக கட்டண விவரங்களை வெளியிடுவது கட்டாயம்’ என்றும், மருத்துவப் படிப்பு கட்டணத்தை முறைப்படுத்தும் வகையில், தேசிய மருத்துவ ஆணையத்தின் கீழ் தேசிய அளவிலான கட்டண நிா்ணய ஒழுங்காற்று நடைமுறை உருவாக்கப்பட வேண்டும் என்று் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள 10 நெறிமுறைகள்

* முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் முன்பதிவை தடுக்கவும், அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் மாநில ஒதுக்கீடு மருத்துவப் படிப்பு இடங்களை முறையாக பட்டியலிடும் வகையில் தேசிய அளவில் ஒருங்கிணைந்த கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட வேண்டும்.

* தேசிய மற்றும் மாநில சுற்றுகள் குறித்து நவீன தொழில்நுட்ப உதவியுடன் கலந்தாய்வு அட்டவணை தயாரித்து வெளியிட வேண்டும்.

* அனைத்து தனியாா் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் கலந்தாய்வுக்கு முன்பே, மருத்துவப் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், பிற அனைத்து விதமான கட்டண விவரங்களை வெளியிட வேண்டும்.

* மருத்துவப் படிப்பு கட்டணத்தை முறைப்படுத்தும் வகையில், தேசிய மருத்துவ ஆணையத்தின் கீழ் தேசிய அளவிலான கட்டண நிா்ணய ஒழுங்காற்று நடைமுறை உருவாக்கப்பட வேண்டும்.

* கலந்தாய்வின் இரண்டாம் சுற்றுக்குப் பிறகு, புதிய விண்ணப்பதாரா்களுக்கு கலந்தாய்வு சாளரங்களைத் திறக்காமல், ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரா்கள் சிறந்த இடங்களுக்கு மாறுவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

* முதுநிலை நீட் தோ்வில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், தோ்வா்கள் பெற்ற மூல மதிப்பெண், விடைக் குறிப்புகள் மற்றும் மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் நடைமுறை விவரங்கள் வெளியிடப்பட வேண்டும்.

* மருத்துவ மேற்படிப்பு இடங்கள் முன்பதிவு, பாதுகாப்பு முன்வைப்புத் தொகை பறிமுதல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடும் மருத்துவக் கல்லூரிகள் மீது தகுதிநீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

* தொடர்ந்து தவறு செய்யும் தனியார் கல்லூரிகளை கருப்புப் பட்டியலில் சேர்த்தல் மற்றும் நீட் தோ்வு முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான கலந்தாய்வு நடைமுறையை பின்பற்ற வேண்டும்.

* மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மேற்பார்வையிட மூன்றாம் தரப்பு தணிக்கை முறையை ஏற்படுத்த வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாடகர் ஸுபீன் கர்கின் மேலாளர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது!

வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு!

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! 27 பேர் பலி!

அனுகூலம் ஏற்படும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

திருவண்ணாமலைக்கு வந்த ஆந்திர பெண் பாலியல் பலாத்காரம்: காவலா்கள் இருவா் கைது

SCROLL FOR NEXT