கோப்புப்படம்
கோப்புப்படம் ANI
தேர்தல் செய்திகள்

அமித் ஷாவின் காரைக்குடி வாகனப் பேரணி ரத்து: காரணம் என்ன?

DIN

காரைக்குடியில் சிவகங்கை பாஜக வேட்பாளரை ஆதரித்து நாளை நடைபெறவிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வாகனப் பேரணி ரத்து செய்யப்பட்டது.

தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

கடந்த இரண்டு நாள்களாக தமிழகத்தில் முகாமிட்டு பிரதமர் நரேந்திர மோடி பிரசாரத்தில் ஈடுபட்ட நிலையில், நாளை மதுரையிலும், காரைக்காலிலும் அமித் ஷாவின் வாகனப் பேரணி நடத்த திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சிவகங்கை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவருமான டி. தேவநாதன், தனது நிதி நிறுவனத்தின் மூலம் ரூ.525 கோடி மோசடி செய்ததாக தேர்தல் ஆணையத்தில் எதிர்க்கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.

இந்த நிலையில், தேவநாதனை ஆதரித்து நாளை பிற்பகல் அமித் ஷா பங்கேற்கும் வாகனப் பேரணி ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மசினகுடியில் ரேஷன் கடையின் ஷட்டரை மீண்டும் உடைத்த காட்டு யானை

காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல்: கடைகளுக்கு அபராதம் விதிப்பு

அதிக மகசூலுக்கு கோடைஉழவு மேற்கொள்ள அறிவுறுத்தல்

குன்னூா்-கோத்தகிரி  சாலையில்   மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

பலா பழங்களை ருசிக்கும் யானை

SCROLL FOR NEXT