ஏ.சி. சண்முகம்
ஏ.சி. சண்முகம் 
தேர்தல் செய்திகள்

ஏ.சி. சண்முகம் வீட்டிலிருந்து ரூ. 8.4 லட்சம் பறிமுதலா?

DIN

வேலூர் பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வீட்டில் தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில் ரூ. 8.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து வேலூர் மக்களவைத் தொகுதியில் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இவருக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் பிரசாரம் மேற்கொண்டிருந்தார்.

இந்த நிலையில், வேலூரில் உள்ள ஏ.சி.சண்முகத்தின் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று காலை நடத்திய சோதனையில் ரூ. 8.4 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே கடந்த 7-ஆம் தேதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தின் நெருங்கிய உறவினர் நடராஜன் என்பவரின் வீட்டில் இருந்து ரூ. 7.5 லட்சம் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலின் போது, வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு நெருங்கிய உறவினரின் வீட்டில் இருந்து ரூ. 100 கோடி பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

பிறகு உச்சநீதிமன்ற உத்தரவின்படி, ஆகஸ்ட் மாதம் வேலூருக்கு தனியாக தேர்தல் நடத்தப்பட்டு கதிர் ஆனந்த் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT