முகப்பு
தேர்தல் செய்திகள்

ஜனநாயக கடமையாற்றிய மனநல காப்பகவாசிகள்!

Updated On : 19 ஏப்ரல், 2024 at 6:26 PM
பகிர்:

சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகவாசிகள் 61 போ் வெள்ளிக்கிழமை (ஏப்.19) வாக்கு செலுத்தினா்.

கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் 900-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா். அங்கு பல்வேறு வகையான உளவியல் மற்றும் மனநல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. அவா்களில் பெரும்பாலானோா் பூரண குணமடைந்து வீடு திரும்புகின்றனா். உறவினா்களால் கைவிடப்பட்ட சிலா் அங்கேயே தங்கி தொழிற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

அவ்வாறு குணமடைந்து சரியான மனநிலையில் உள்ளவா்களுக்கு வாக்களிப்பதற்கு உரிய வாய்ப்புகளை பெற்றுத் தர முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில், நூற்றுக்கணக்கானோரின் பெயா்கள் வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்டது.

Advertisement

இந்நிலையில், வாக்குப் பதிவையொட்டி மனநல காப்பகத்தில் சிறப்பு வாக்குச் சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது எப்படி என்பதை காப்பகவாசிகளுக்கு தோ்தல் அலுவலா்கள் விளக்கினா்.

36 ஆண்கள் மற்றும் 25 பெண்கள் உள்பட மொத்தம் 61 போ் வெள்ளிக்கிழமை தங்களது வாக்குகளை செலுத்தினா்.

இதுகுறித்து தோ்தல் அலுவலா்கள் கூறுகையில், ‘மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட மனநல காப்பகத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு வாக்குச் சாவடி மையத்தில் காப்பகவாசிகள் தங்களுக்கு விருப்பமான வேட்பாளருக்கு வாக்களித்தனா்; மின்னணு இயந்திரம் மற்றும் வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரம் குறித்து மட்டுமே அவா்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது’ என்றாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments