முகப்பு
தேர்தல் செய்திகள்

இந்தியா கூட்டணியின் வெற்றி மகத்தானது: முதல்வர் ஸ்டாலின்

மக்களவைத் தேர்தல் முடிவுகளையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

Updated On : 4 ஜூன், 2024 at 5:01 PM
பகிர்:

மக்களவைத் தேர்தலின் முடிவுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. ஆனாலும், இந்தியா கூட்டணி வேட்பாளர்களும் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று வருகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணியே ஆட்சி அமைக்க உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

இந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய முதல்வர், “இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த தமிழக மக்களுக்கும் கலைஞரின் உடன்பிறப்பு தொண்டர்களுக்கும் கோடான கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுக்கு யாரும் எதிரிகள் இல்லை என்கிற பிம்பத்தை பாஜகவினர் ஏற்படுத்தினர்.

ஆனால், தற்போது ஆட்சியமைப்பதற்கான தனிப்பெரும்பான்மையைக் கூட பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பா.ஜ.க.வின் பணபலம், அதிகார துஷ்பிரயோகம், ஊடகப் பரப்புரை ஆகிய அனைத்தையும் உடைத்தெறிந்து இந்தியா கூட்டணி பெற்றுள்ள வெற்றி மகத்தானது. வரலாற்றுச் சிறப்புமிக்கது!

அரசியல்சாசனத்தை மாற்றிவிடலாம், வெறுப்பு பரப்புரைகளால் மக்களைப் பிளவுபடுத்தலாம் என்று நினைத்த பா.ஜ.க.வுக்கு எதிரான மக்கள் தீர்ப்புக்கு நன்றி!” என்றார்.

தொடர்ந்து பத்திரிகையாளர்கள் கேள்விகேட்டனர். முக்கியமாக, ‘இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக உங்களை முன்மொழிவார்களா?’ எனக் கேட்கப்பட்டது. அதற்கு முதல்வர் ஸ்டாலின், ‘முன்பே இதற்கு பதில் சொல்லியிருக்கிறேன். கலைஞர் சொன்னதுபோல், என் உயரம் எனக்குத் தெரியும்’ என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →