மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தியளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. ஆனாலும், இந்தியா கூட்டணி வேட்பாளர்களும் குறைவான வாக்குகள் வித்தியாத்திலேயே பின்னடைவில் இருப்பதால், ஆட்சியைக் கைப்பற்றுவது யார்? என்னும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கேரளத்தின் வயநாட்டில் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டிலும் முன்னிலை வகித்து வருகிறார். இதனால், பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் தன் வெற்றியைப் பதிவு செய்ய உள்ளார்.
அதேபோல், பிரதமர் மோடியும் வாரணாசி தொகுதியில் முன்னணியில் உள்ளார்.
தேர்தல் முடிவுகள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இந்தியா கூட்டணிக்கும் சாதகமான நிலையில் உள்ளதால், இரு கூட்டணிக் கட்சித் தலைவர்களும் ஆலோசனையில் ஈடுபட உள்ளனர்.
அதில், இன்று மாலை 6 மணிக்கு தில்லியில் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனையில் கலந்துகொள்கின்றனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இதற்கான அழைப்பை விடுத்துள்ளார். இதில், இந்தியா கூட்டணி முக்கியமான முடிவுகளை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.