முகப்பு
தமிழ்நாடு

மக்கள் நலனுக்காகவும் இபிஎஸ் தில்லி செல்ல வேண்டும்: செல்வப்பெருந்தகை

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தில்லி பயணம் குறித்து காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியது குறித்து...

Updated On : 20 மார்ச், 2026 at 11:09 AM
செல்வப்பெருந்தகை - விடியோ க்ளிப்
பகிர்:

தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தில்லி செல்ல வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுடன் செல்வப்பெருந்தகை பேசுகையில், "அவர் (இபிஎஸ்) அடிக்கடி தில்லிக்கு செல்கிறார். அவர் தில்லி செல்லலாம். ஆனால், தமிழ்நாட்டின் உரிமைகளையும் தில்லியில் அவர் கேட்க வேண்டும்.

சமக்ர சிக்‌ஷா, ஜல் ஜீவன், ஜிஎஸ்டி, கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் சேவைகளுக்கான நிதி நிலுவையில் உள்ளது.

அவர் தில்லி செல்கிறார் என்றால், அது மக்களின் நலனுக்காக இருக்க வேண்டும். தமிழக அரசுக்கான நிதி, இன்னும் பெரியளவில் நிலுவையில் உள்ளது.

இந்தத் தேர்தல், தமிழ்நாட்டுக்கும் தில்லிக்கும் மற்றும் மக்களின் உரிமைகளுக்கு இடையிலான தேர்தலே" என்று தெரிவித்தார்.

முன்னதாக, எதிர்க்கட்சியினரை விமர்சித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், "தங்கள் சுயநலனுக்காகச் சொந்தக் கட்சியை அடமானம் வைத்ததுபோல, தமிழ்நாட்டையும் தில்லியிடம் அடகு வைக்கத் தயங்காதவர்கள் அவர்கள் என்பதை மக்கள் அறிவார்கள். இனி எதிர்க்கட்சியினர் எடுக்கும் முடிவு என்பது தில்லி எடுக்கும் முடிவுதான் என்பதையும் மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

AIADMK Leader Edappadi Palaniswami should be asking for Tamil Nadu’s rights, says Selvaperunthagai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.