முகப்பு
தமிழ்நாடு

எடப்பாடி தொகுதியில் தவெக ஆதரவு வேட்பாளர் முன்னிலை!

எடப்பாடி தொகுதியில் தவெக ஆதரவு வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார்.

Updated On : 4 மே 2026, 10:53 am IST
எடப்பாடி பழனிசாமி / தவெக ஆதரவு வேட்பாளர் பிரேம்குமார்
பகிர்:

எடப்பாடி தொகுதியில் தவெக ஆதரவு வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார்.

எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளாரும் தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி போட்டியிட்டார்.

திமுக சார்பில் காசி என்பவரும், தவெக சார்பில் அருண்குமாா் என்பவரும் இத்தொகுதியி போட்டியிட்டனர்.

Advertisement

இதில், தவெக வேட்பாளா் அருண்குமாா் மற்றும் மாற்று வேட்பாளராக அவரது மனைவி நித்யா ஆகியோரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, தவெக முன்னாள் நிா்வாகியும் எடப்பாடி தொகுதியில் தொலைக்காட்சி பெட்டி சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளருமான பிரேம்குமாருக்கு தவெக தொண்டர்கள் ஆதரவு தெரிவிக்குமாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்திருந்தார்.

தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் நிலையில் காலை 10.05 மணி வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி 6,375 வாக்குகள் பெற்று தவெக ஆதரவு வேட்பாளர் பிரேம்குமார் முன்னிலை வகித்து வருகிறார்.

summary

TVK-backed candidate continues to lead in Edappadi constituency!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.