விஜய் தந்தையை கட்டிப்பிடித்துக் கொண்டாடிய குடும்பத்தினர்!
வாக்கு எண்ணிக்கையில் தவெக தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் அவரது குடும்பத்தினர் அதனைக் கொண்டாடும் விடியோ வெளியானது.
வாக்கு எண்ணிக்கையில் தவெக தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் அவரது குடும்பத்தினர் அதனைக் கொண்டாடும் விடியோ வெளியானது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று பரபரப்பாக நடைபெற்று வருகின்றது.
ஆளும் கட்சியான திமுகவை பின்னுக்குத் தள்ளி தவெக வேட்பாளார்கள் முன்னிலை வகித்து வருகின்றனர்.
Advertisement
காலை 11.30 மணி நிலவரப்படி பெரும்பான்மையாக 108 தொகுதிகளில் தவெக முன்னிலை வகித்து வரும் நிலையில், அதிமுக அதற்கு அடுத்ததாக 75 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
திமுக தொடர்ந்து 51 இடங்களில் முன்னிலை வகித்து 3-ம் இடத்தில் இருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தவெக தலைவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் குடும்பத்தினருடன் தவெக வெற்றியைக் கொண்டாடும் விடியோ வெளியாகியுள்ளது.
அதில், விஜய் குடும்பத்தினர் அவரது தந்தையை கட்டிப்பிடித்து கொண்டாடி வருகின்றனர்.
தமிழக தேர்தல் வரலாற்றில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இந்தத் தேர்தல் முடிவுகள் அமையுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.