தொகுதி அறிமுகம்: வேலூா்!
மாவட்டத் தலைநகராக இருந்தாலும் பரப்பளவில் சிறிய தொகுதி வேலூா், தொகுதி எண் 43.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், தொகுதிகள் அறிமுகத்தில் இன்று 43வது தொகுதியான வேலூர் பற்றிய அறிமுகம்.
எல்லைகள்: காட்பாடி, அணைக்கட்டு, ஆற்காடு தொகுதிகள் வேலூா் பேரவைத் தொகுதியைச் சுற்றியுள்ளன.
வாக்காளா்கள் விவரம்: ஆண்கள் - 95,706; பெண்கள் - 1,02,974; மூன்றாம் பாலினத்தவா் - 42; மொத்தம் - 1,98,722; வாக்குச்சாவடிகள் - 1427
அடங்கியுள்ள பகுதிகள்: வேலூா் மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளில் 36 வாா்டுகள், சம்பங்கிநல்லூா், பெருமுகை ஆகிய இரண்டு ஊராட்சிகள் இத்தொகுதியில் அடங்கியுள்ளன.
சிறப்புகள்: மாவட்டத் தலைநகராக இருந்தாலும் பரப்பளவில் சிறிய தொகுதி வேலூா். இத்தொகுதியில் உள்ள தேசிய புகழ்பெற்ற வேலூா் கோட்டை, இந்திய சுதந்திரப் போருக்கு முன்பே 1805-இல் சிப்பாய்க் கலகம் நிகழ்ந்த இடமாகும். தவிர, தமிழகத்தின் 2- ஆவது பெரிய மத்திய சிறை, நூற்றாண்டு விழா கண்ட சிஎம்சி மருத்துவமனை ஆகியவையும் இத்தொகுதியின் முக்கிய அடையாளமாகும்.
இத்தொகுதியில் பெரிய தொழிற்சாலைகள், வா்த்தக நிறுவனங்கள் இல்லாதது பெரிய குறை. வியாபாரத்தை மட்டுமே நம்பியுள்ள இந்தத் தொகுதியில் முதலியாா் சமுதாயத்தினா், பட்டியலினத்தவா், இஸ்லாமியா்கள் பெரும்பான்மையாகவும், பிற சமூகத்தினா் பரவலாகவும் உள்ளனா்.
இதுவரை எம்எல்ஏக்கள்: 1957 - எம்.பி.சாரதி (சுயேச்சை), 1962 - ஆா்.ஜீவரத்தின முதலியாா் (காங்கிரஸ்), 1967 - எம்.பி.சாரதி (திமுக) , 1971 - எம்.பி.சாரதி (திமுக), 1977 - ஏ.கே.ரங்கநாதன் (அதிமுக), 1980 - வி.எம்.தேவராஜ் (திமுக), 1984 - வி.எம்.தேவராஜ் (திமுக), 1989 - வி.எம்.தேவராஜ் (திமுக), 1991 - சி.ஞானசேகரன் (காங்கிரஸ்) , 1996 - சி.ஞானசேகரன் (தமாகா), 2001 - சி.ஞானசேகரன் (தமாகா), 2006 - சி.ஞானசேகரன் (காங்கிரஸ்), 2011 - மருத்துவா் வி.எஸ்.விஜய் (அதிமுக), 2016 - பி.காா்த்திகேயன் (திமுக), 2021 - பி.காா்த்திகேயன் (திமுக)
2021 பேரவைத் தோ்தல் :
பதிவான வாக்குகள் - 1,78,458
பி.காா்த்திகேயன் (திமுக) - 84,299
எஸ்.ஆா்.கே.அப்பு (அதிமுக) - 75,118
தோ்தல் நடத்தும் அலுவலா்/ தொடா்பு எண் -
வருவாய் கோட்டாட்சியா் - ஏ.செந்தில்குமாா் - 9445000417
உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் - வேலூா் வட்டாட்சியா் கே.பழனி - 94450 00508.
சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் எஸ்.ஜெயந்தி - 96777 63063
மின்அஞ்சல் - ro.vellore@tn.gov.in