தமிழ்நாடு காவல்துறை அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள 5 துப்புரவாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு காவல்துறை இயக்குநர், குற்றம், எழும்பூர், சென்னை-8 அலுவலகம் வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்த 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் வரும் 11-ஆம் தேதிக்குள் தமிழ்நாடு காவல்துறை இயக்குநர், குற்றம், எழும்பூர், சென்னை-8 விலாசத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.1,300 - 3,000 + தர ஊதியமாக ரூ.300 வழங்கப்படும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpolice.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும். அல்லது http://govtjobsdrive.in/wp-content/uploads/2016/11/Tamilnadu-Police-Recruitment-2016-05-Police-Station-Cleaner-Sweepers-Posts.jpg என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.