வேலைவாய்ப்பு

யுனைட்டெட் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை: பட்டதாரிகள் 28க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

ஆர். வெங்கடேசன்


பொதுத்துறை நிறுவனமான யுனைடெட் இன்சூரன்ஸ் கம்பெனியில் இந்தியா முழுவதும் காலியாக உள்ள 696 உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 131 இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

பணி: Assistant

காலியிடங்கள்: 696

சம்பளம்: மாதம் ரூ.14,435 - 32,030

வயதுவரம்பு: 30.06.2017 தேதியின்படி 18 முதல் 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். உள்ளூர் மொழியில் எழுத, படிக்க மற்றும் பேச தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: இரு கட்ட ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.uiic.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழகத்தில் ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, கோவை, திண்டுக்கல், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, சேலம், பெரம்பலூர், நாகர்கோவில், கன்னியாகுமாரி, மதுரை

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.08.2017

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: 22.09.2017

முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதி: 23.10.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://images.dinamani.com/uploads/user/resources/pdf/2017/8/16/UIIC-Assistant-Syllabus-2017.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT