வேலைவாய்ப்பு

எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் 475 செவிலியர் வேலை

அனைவராலும் எய்ம்ஸ் என அழைக்கப்படும் அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம். புதுதில்லியை தலைமையிடமாகக் கொண்டு

ஆர். வெங்கடேசன்

அனைவராலும் எய்ம்ஸ் என அழைக்கப்படும் அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம். புதுதில்லியை தலைமையிடமாகக் கொண்டு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. தற்போது ராய்ப்பூரில் உள்ள எய்ம்ஸ் மையத்தில் நிரப்பப்பட உள்ள 475 செவிலியர் பணியிடங்களுகான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு செவிலியர் பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 475

பணி: ஸ்டாப் நர்ஸ் (கிரேடு 1) - 75

பணி: ஸ்டாப் நர்ஸ் (கிரேடு 2) - 400

தகுதி: நர்சிங் பிரிவில் 4 ஆண்டு பி.எஸ்சி. நர்சிங் பட்டம், 2 ஆண்டு சான்றிதழ் படிப்புடன் குறிப்பிட்ட பிரிவில் பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 31.07.2017 தேதியின் படி 21 - 35க்குள் இருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.1000, எஸ்சி, எஸ்டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.aiimsraipur.edu.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.07.2017

மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு www.aiimsraipur.edu.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

அரையிறுதிக்கு முன்னேறப் போவது யார்? தெ.ஆப்பிரிக்காவை சந்திக்கும் மேற்கிந்தியத் தீவுகள்!

தேவை கட்டாய வெற்றி; இன்று ஜிம்பாப்வேயுடன் களமாடும் இந்தியா!

ஓய்வறியாப் போராளிக்குப் பிரியாவிடை!

வேளாண் அறிவியல் நிலையத்தில் ரிசா்வ் வங்கி அதிகாரி ஆய்வு

SCROLL FOR NEXT