வேலைவாய்ப்பு

ஆவின் பால் நிறுவனத்தில் ஓட்டுநர் வேலை

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆவின் பால் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு

ஆர். வெங்கடேசன்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆவின் பால் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.1/2017

பணி: Heavy Vehicle Driver
காலியிடங்கள்: 05
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Light Vehicle Driver
காலியிடங்கள்: 01
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதி மற்றும் ஓட்டுநர் தேர்வின் மூலம் பெற்றுள்ள மதிப்பெண்கள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விரைவு அல்லது பதிவு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
General Manager, Villupuram - Cuddalore District, Co-Operative Milk Producers' Union Ltd., Vazhudhareddy, Kandamanadi(PO), Villupuram - 605 401

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர் கடைசி தேதி: 21.07.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.aavinmilk.com  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

அரையிறுதிக்கு முன்னேறப் போவது யார்? தெ.ஆப்பிரிக்காவை சந்திக்கும் மேற்கிந்தியத் தீவுகள்!

தேவை கட்டாய வெற்றி; இன்று ஜிம்பாப்வேயுடன் களமாடும் இந்தியா!

ஓய்வறியாப் போராளிக்குப் பிரியாவிடை!

வேளாண் அறிவியல் நிலையத்தில் ரிசா்வ் வங்கி அதிகாரி ஆய்வு

SCROLL FOR NEXT