தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகத்தில் வேலை
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகத்தில் நிரப்பப்பட உள்ள ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும்
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகத்தில் நிரப்பப்பட உள்ள ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: ஓட்டுநர்
காலியிடங்கள்: 9
Advertisement
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்றிக்க வேண்டும். கனரக வாகனங்களை இயக்குவதில் இரண்டாண்டு அனுபவம் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் அனுப்பி வைக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Managing Director, Tamilnadu Small Industries Development Corporation Limited, (TANSIDCO), SIDCO Corporation Building, Thiru Vi Ka Industrial Estate, Guindy Chennai - 600032
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 26.7.17