வேலைவாய்ப்பு

மத்திய அரசில் 1102 வேலை: பணியாளர்கள் தேர்வாணையம் அழைப்பு

மத்திய அரசின் வானிலை ஆராய்ச்சி துறையில் நிரப்பப்பட உள்ள உதவி விஞ்ஞானி குரூப் பி பணியிடங்களுக்கான அறிவிப்பை பணியாளர்கள்

ஆர். வெங்கடேசன்


மத்திய அரசின் வானிலை ஆராய்ச்சி துறையில் நிரப்பப்பட உள்ள உதவி விஞ்ஞானி குரூப் பி பணியிடங்களுக்கான அறிவிப்பை பணியாளர்கள் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 1102

பணி: Scientific Assistant

தகுதி: அறிவியல் துறை (இயற்பியல் ஒரு பாடமாக கொண்ட) கணினி அறிவியல், தகவல் தொடர்பியல் துறைகளில் பட்டம் அல்லது பொறியியல் துறையில் எலக்ட்ராணிக்ஸ் அல்லது  டெலிகம்யூனிகேஷன்ஸ் துறைகளில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 04.08.2017 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.08.2017

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 20.11.2017 - 27.11.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய எஸ்எஸ்சி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்கை http://ssc.nic.in/SSC_WEBSITE_LATEST/notice/notice_pdf/NoticeIMDExamination_2017_18.07.2017.pdf கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சலம்பல பாடல் புரோமோ!

2-வது போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி; சமனில் டி20 தொடர்!

ரசிகர்களின் அன்பை சுயலாபத்துக்காக பயன்படுத்த மாட்டேன்! -நடிகர் அஜித்குமார்

ஊரும் லிரிக்கல் பாடல் வெளியானது!

தமிழ் மண்ணில் அடிமைத்தனத்தை வீழ்த்துவோம்: உதயநிதிஸ்டாலின்

SCROLL FOR NEXT