வேலைவாய்ப்பு

குருப்-2ஏ தேர்வுக்கு இலவச பயிற்சி

தினமணி

வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், குரூப் -2ஏ தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள இளைஞர்கள் பயனடையும் வகையில் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், குரூப் -2ஏ பணியிடங்களுக்கான தேர்வை அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள பட்டதாரி இளைஞர்கள் பயன்பெறும் வகையில், சென்னையில் செயல்பட்டு வரும் தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.

இதில் பங்கேற்க விரும்பும் பட்டதாரி இளைஞர்கள் சாதி மற்றும் கல்விச் சான்றுகளுடன் வரும் 11, 12 ஆகிய தேதிகளில், கிண்டியில் உள்ள துணை இயக்குநர், தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சிக்கு தங்கள் பெயரைப் பதிவு செய்து பயனடையுமாறு அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பு கடித்து பழங்குடியின இளைஞா் காயம்

கஞ்சா விற்றதாக பிகாா் இளைஞா்கள் 2 போ் கைது

கிருஷ்ணகிரியில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ராமநாதபுரம்-புவனேஸ்வா் ரயிலில் கூடுதல் பெட்டி

பைக்கில் வைத்திருந்த ரூ.5 லட்சம் மாயம்

SCROLL FOR NEXT