வேலைவாய்ப்பு

இந்த அழைப்பு உங்களுக்கு தான்: ஆவின் நிறுவனத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்! 

ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தின் திருச்சி மாவட்ட ஆவின் கிளையில் காலியாக உள்ள 38 டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு

ஆர். வெங்கடேசன்

ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தின் திருச்சி மாவட்ட ஆவின் கிளையில் காலியாக உள்ள 38 டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து மார்ச் 16க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:  
பணி: Technician (Operation) – 01 
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400

பணி: Technician (Refrigeration) – 01 
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400

பணி: Technician (Electrical) – 04 
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400

பணி: Senior Factory Assistant (SFA) – 32 
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,200 + தர ஊதியம் ரூ.1,300

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Refrigeration & Airconditioning / Fitter /Dairy Mechanic / Electrician / Wireman / Instrumentation பிரிவில் ஐடிஐ அல்லது பொறியில் துறையில் Mechanical / Electrical and Electronics / Instrumentation and Control Engineering பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். Senior Factory Assistant  பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பிளஸ் டூ தேர்ச்சியுடன் ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். Technician (Electrical) பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் Electrician பிரிவில் ஐடிஐ முடித்து Lineman / Wireman „B‟ Licence  அல்லது Diploma in Electrical and Electronics Engineering  முடித்து “C” Licence பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் பிசி, எம்பிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆன்லைனிலும் செலுத்தலாம். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Manager, Tiruchirappalli District Co-operative Milk Producers‟ Union Limited, Pudhukkottai Road, Kottappattu Trichy – 620 023

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 16.03.2018 

மேலும் விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://aavinmilk.com/hrerdapp250118.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Union Limited () Technician Recruitment 2018

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெஞ்சோடு இழுக்குற... ஜொனிதா!

பள்ளி, மருத்துவமனைகளை விட மசூதிகள் அதிகம்! எங்கு தெரியுமா?

சந்திர கிரகணம்: திருமலை ஏழுமலையான் கோயில் கதவுகள் மூடல்

இந்த வாரம் கலாரசிகன் - 07-09-2025

நள்ளிரவில் முழுமையாகத் தெரியும் சந்திர கிரகணம்! அடுத்து 2028-இல்தான்!

SCROLL FOR NEXT