கட்டுமான நிதிக்கழகத்தில் காலியாக உள்ள 8 உதவி மேலாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Manager (Grade „A‟)
காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.28,150 - 64000
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்பிஏ, இரண்டு ஆண்டு பிஜிடிபிஎம் அல்லது சிஏ, பி.டெக், எல்எல்பி முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.iifci.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து அஞ்சலி அனுப்ப வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை தில்லியில் மாற்றத்தக்க வகையில், India Infrastructure Finance Company Limited என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடை தேதி: 31.12.2019
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.iifcl.org/WriteReadData/Career/Documents/201912101125500102507detailed_advertisement_for_AM.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.