முகப்பு
வேலைவாய்ப்பு

வேலை வேண்டுமா..? ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

முன்னணி பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் (எஸ்.பி.ஐ.) நிரப்பப்பட உள்ள 76 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:41 AM
பகிர்:


முன்னணி பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் (எஸ்.பி.ஐ.) நிரப்பப்பட உள்ள 76 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 76

பணி: Deputy General Manager (Capital Planning) - 01
சம்பளம்: மாதம் ரூ.68,680 - 76,520

பணி: SME Credit Analyst (Sector Specialist) - 11
பணி: SME Credit Analyst (Structuring) - 04
பணி: SME Credit Analyst (Credit Analyst) - 10
பணி: Credit Analyst  (MMGS-III)- 30

சம்பளம்: மாதம் ரூ. 42,020 - 51,490

பணி: Credit Analyst (MMGS-II) -  20
சம்பளம்: மாதம் ரூ.31,705 - 45,950

தகுதி: சி.ஏ., எம்பிஏ (நிதி), முதுநிலை டிப்ளமோ மேனேஜ்மென்ட் படித்தவர்கள், பொறியியல் துறையில் பிஇ அல்லது பி.டெக் படிப்புடன் எம்பிஏ(நிதி) அல்லது சிஏ, சிஎஃப்ஏ தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு: அதிகபட்சம் 45க்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வில் கலந்துகொள்பவர்களுக்கு 3 -ஆம் வகுப்பு ரயில் கட்டணம் வழங்கபப்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பத்தாரர்கள் ரூ.125 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: https://www.sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.sbi.co.in என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.08.2019 

முழு கட்டுரையைப் படிக்க →