வேலைவாய்ப்பு

ரூ.30 ஆயிரம் சம்பளத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை..!

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 68 சட்ட எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும்

தினமணி

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 68 சட்ட எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஏப்ரல் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி : சட்ட எழுத்தர் (Law Clerks)

காலியிடங்கள்: 68

தகுதி: சட்டத்துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: 01.07.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். 
சம்பளம்: மாதம் ரூ. 30,000 வரையில் வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.hcmadras.tn.nic.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Registrar General, High Court, Madras-600 104 என்னும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். அல்லது estt.madrashiahcourt@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.hcmadras.tn.nic.in/Law%20Clerk_Guidelines_2019.pdf அல்லது http://www.hcmadras.tn.nic.in/Notf43of2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.04.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT