வேலைவாய்ப்பு

ரூ.36 ஆயிரம் சம்பளத்தில் நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் வேலை வேண்டுமா? 

ஆர். வெங்கடேசன்


நிலக்கரி சுரங்க நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்ட மாநிலத்தில் உள்ள காலியாக உள்ள கணக்காளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Cost Accountant/Accountant

காலியிடங்கள்: 57

சம்பளம்: மாதம் ரூ.37,063.41

வயதுவரம்பு: 01.04.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகைகோருபவருக்கு அரசுவிதிகளின்படி  வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். 

தகுதி: ஐ.சி.டபிள்யூ.ஏ அல்லது சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை பாரத ஸ்டேட் வங்கி கணக்கு எண்: 35228997799 என்ற எண்ணில் டெப்பாசிட் செய்ய வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: www.easterncoal.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.10.2019

மேலும் முழுமையைான விவரங்கள் அறிய http://www.easterncoal.gov.in/notices/recruitment/20191001acct.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

SCROLL FOR NEXT