வேலைவாய்ப்பு

ISRO Jobs: இஸ்ரோ நிறுவனத்தில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

அனைவராலும் இஸ்ரோ என அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பில் நிரப்பப்பட உள்ள 327 விஞ்ஞானி, பொறியாளர்

ஆர். வெங்கடேசன்



அனைவராலும் இஸ்ரோ என அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பில் நிரப்பப்பட உள்ள 327 விஞ்ஞானி, பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 327

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Scientist/Engineer - SC (Electronics) - 131
பணி: Scientist/Engineer -SC (Mechanical) - 135

பணி: Scientist/Engineer-SC (Computer Science) - 58
பணி: Scientist/Engineer-SC (Electronics) - Autonomous Body - 03

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 65 சதவீத மதிப்பெண்களுடன் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 04.11.2019 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.56,100 + இதர சலுகைகள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை வங்கி அட்டைகளை பயன்படுத்து ஆன்லைன் மூலம் செலுத்தலாம். பெண்கள், எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர். பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவினர்கள் மற்றும் பெஞ்ச்மார்க் குறைபாடுகள் உடைய மாற்றுத்திறனாளி விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. 

விண்ணப்பிக்கும் முறை: https://www.isro.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.isro.gov.in/sites/default/files/billingual_advertisement.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.11.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT