முகப்பு
வேலைவாய்ப்பு

ரூ.56 ஆயிரம் சம்பளத்தில் தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை

தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை நிரப்பப்பட உள்ள 495 விஞ்ஞானி பணியிடங்களுக்கான அறிவிப்பு

Updated On : 8 மே, 2020 at 4:17 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:06 PM



தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை நிரப்பப்பட உள்ள 495 விஞ்ஞானி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 495

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

Advertisement

பணி: Scientist-‘B’ Group ‘A’ (S&T) - 288
சம்பளம்: மாதம் ரூ.56,100- 1,77,500

பணி: Scientific/Technical Assistant - ‘A’ Group ‘B’ (S&T) - 207
சம்பளம்: மாதம் ரூ. 35,400- 1,12,400

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள், எம்.எஸ்சி, எம்.டெக்., எம்சிஏ., எம்.இ., எம்.பில் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.800. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம் .

விண்ணப்பிக்கும் முறை: https://www.calicut.nielit.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும்விவரங்களுக்கு https://www.calicut.nielit.in/nic/documentformats/DetailedAdvertisement.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.06.2020

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.