வேலைவாய்ப்பு

ரூ.20 ஆயிரம் சம்பளத்தில் சமூக நல அலுவலகத்தில் வேலை வேண்டுமா? 

திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் மற்றும் பொது இடங்களில், குடும்பங்களில், சமுதாயத்தில் பணிபுரியும் இடங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் "ஓன் ஸ்டாப் சென்டர்" தொடங்கப்பட்டுள்ளது.

தினமணி



திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் மற்றும் பொது இடங்களில், குடும்பங்களில், சமுதாயத்தில் பணிபுரியும் இடங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் "ஓன் ஸ்டாப் சென்டர்" தொடங்கப்பட்டுள்ளது. அதில் சுழற்சி முறையில் பணியாற்ற மூத்த ஆலோசகர், வழக்கு பணியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பெண்களிடம் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம் : திருநெல்வேலி சமூக நல அலுவலகம் 

மொத்த காலியிடங்கள்: 08 

பணி: மூத்த ஆலோசகர் - 01
சம்பளம்: மாதம் ரூ.20,000

பணி: வழக்கு பணியாளர் - 04
சம்பளம்: மாதம் ரூ.15,000 

பணி: பல்நோக்கு உதவியாளர் - 02
சம்பளம்: மாதம் ரூ.6,400

பணி: இரவு காவலர் மற்றும் ஓட்டுநர் - 01
சம்பளம்: மாதம் ரூ.10,000

தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி, சமூக பணியியல் துறையில் இளநிலை, முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பெண்களாகவும், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்ற தயார் நிலையில் இருப்பவர்களாக இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை : https://tirunelveli.nic.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.   

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி : மாவட்ட சமூக நல அலுவலகம், பி4/107, சுப்பிரமணியபுரம் தெரு, வ.உ.சி. மைதானம் எதிரில், திருவனந்தபுரம் ரோடு, பாளையங்கோட்டை, திருநெல்வேலி - 627 002. 

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள் : 04.01.2022 

மேலும் விபரங்கள் அறிய https://tirunelveli.nic.in அல்லது https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2021/12/2021122465.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசன் புரோமோ தேதி!

தில்லி: முந்திரி திருட்டு வழக்கில் 4 பேர் கைது, 440 கிலோ மீட்பு

கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை!

SCROLL FOR NEXT