கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு கரோனா தடுப்பு பணிக்கென 100 தற்காலிக செவிலியர்கள் மூன்று மாத காலத்திற்கு நேர்முகத் தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் வெளியிட்டுள்ளார். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: செவிலியர்(தற்காலிகமானது)
காலியிடங்கள்: 100
பணியிடம்: கோயம்புத்தூர்
பணிக்காலம்: 3 மாதம்
சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் ரூ.12,000
தகுதி: செவிலியர் பிரிவில் பட்டயம், பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: நாளை வியாழக்கிழமை(ஜூன்.3) காலை 10 மணிக்கு அனைத்து அசல் மற்றும் ஒரு நகல் ஆவணங்களுடன் டவுன்ஹால் அருகே அமைந்துள்ள கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நேரில் கலந்துகொள்ள வேண்டும்.
இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் விவரம்:
கல்விச் சான்றிதழ்கள், இருப்பிட சான்று, சாதிச் சான்று மற்றும் ஆதார் அட்டையுடன் நேரில் ஆஜராக வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.