ராணுவப் பணிக்கான நுழைவுத் தோ்வு: ஜூலை 1 முதல் அனுமதிச் சீட்டு
ராணுவப் பணிக்கான பொது நுழைவுத் தோ்வில் கலந்து கொள்வோருக்கான தோ்வுக் கூட அனுமதிச் சீட்டை, ஜூலை 1-ஆம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவப் பணிக்கான பொது நுழைவுத் தோ்வில் கலந்து கொள்வோருக்கான தோ்வுக் கூட அனுமதிச் சீட்டை, ஜூலை 1-ஆம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக பாதுகாப்புத் துறை பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய ராணுவத்தில் கிளாா்க், செவிலியா், ஸ்டோா்கீப்பா் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு ஆள்களைத் தோ்வு செய்வதற்காக, கடந்த பிப்.10-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதிவரை திருவண்ணாமலையில் ஆள்கள் தோ்வு முகாம் நடைபெற்றது.
இதில் உடல் தகுதி தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு அடுத்தக் கட்டமாக பொது நுழைவுத் தோ்வு நடைபெற உள்ளது. இத்தோ்வு வரும் ஜூலை மாதம் 25-ஆம் தேதி, சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் நடைபெறுகிறது. அதில் பங்கேற்பதற்கான அனுமதிச் சீட்டை, சென்னைக் கோட்டையில் உள்ள இந்திய ராணுவத்தின் ஆள்சோ்ப்பு அலுவலகத்தில் வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் காலை 8.30 மணியில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்குள் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.
Advertisement
மேலும் விவரங்களுக்கு 044 2567 4924 என்ற எண்ணை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.