விண்ணப்பித்துவிட்டீர்களா..? வன மரபியல் துறையில் துணை ரேஞ்சர் வேலை
இந்திய வன மரபியல் மற்றும் இனப்பெருக்க துறையில் நிரப்பப்பட உள்ள வனக் காவலர் மற்றும் துணை ரேஞ்சர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்புவிண்ணப்பித்துவிட்டீர்களா..? வன மரபியல் துறையில் துணை ரேஞ்சர் வேலை
இந்திய வன மரபியல் மற்றும் இனப்பெருக்க துறையில் நிரப்பப்பட உள்ள வனக் காவலர் மற்றும் துணை ரேஞ்சர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய வன மரபியல் மற்றும் இனப்பெருக்க துறையில் நிரப்பப்பட உள்ள வனக் காவலர் மற்றும் துணை ரேஞ்சர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: CTR-1/24-124/2020/Deputation
பணி: Forester - 01
வயதுவரம்பு: 50-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: வனவியல் பயிற்சி முடித்து 8 ஆண்டுகள் வனக் காவலர் பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Deputy Ranger - 01
வயதுவரம்பு: 50-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: வனவியல் பயிற்சி முடித்து 10 ஆண்டுகள் வனக்காவலர் பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை The Director, IFGTB என்ற பெயரில் கோவையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ifgtb,icfre.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Director, IFGTB Forest Campus, R.S.Puram, Coimbatore(TN) - 641 002
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.03.2021
மேலும் விவரங்கள் அறிய http://ifgtb.icfre.gov.in/advertisement/CTR-I24-124.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.