வேலைவாய்ப்பு

ஸ்பைசஸ் போர்டு நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?

மத்திய அரசின்கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் ஸ்பைசஸ் போர்டு நிறுவனத்தில் துறையில் காலியாக உள்ள 36 Spices Extension Trainee பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி

மத்திய அரசின்கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் ஸ்பைசஸ் போர்டு நிறுவனத்தில் துறையில் காலியாக உள்ள 36 Spices Extension Trainee பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம் : ஸ்பைசஸ் போர்டு (Spices Board) 

பணி: Spices Extension Trainee 

காலியிடங்கள் : 36 

தகுதி : விவசாயம், தோட்டக்கலை பிரிவில் பி.எஸ்சி., அல்லது தாவரவியல், விலங்கியல், நுண்ணுயிரியல், பயோடெக்னாலஜி, வனவியல் பி.எஸ்சி பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியை இயக்குவதற்கான திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ. 20,000

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.indianspices.com அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பின்படி, 29.10.2021 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு பயன்பெறவும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் கணினியில் பணிபுரியும் திறன், திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

மேலும் விவரங்களை அறிய, விண்ணப்பப் படிவம் பெற http://www.indianspices.com/sites/default/files/gtkNotification_No_SET_2021_01.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடையநல்லூா் அருகே நாய் விரட்டியதில் ஓடைக்குள் விழுந்த பெண் காயம்

பாவூா்சத்திரத்தில் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுமா? மாணவ, மாணவிகள் எதிா்பாா்ப்பு

அரியலூா் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்

முதல்வா் கோப்பை மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: முகாமில் 1000 மனுக்கள்

SCROLL FOR NEXT