வேலைவாய்ப்பு

ரூ.30 ஆயிரம் சம்பளத்தில் 10, பட்டதாரிகளுக்கு தமிழக அரசில் வேலை

தினமணி


தென்காசி மாவட்டம் சமூக நல அலுவலத்தில் மய்ய நிர்வாகி, மூத்த ஆலோசகர், தகவல் தொழில்நுட்ப பணியாளர், வழக்கு பணியாளர், பல்நோக்கு உதவியாளர், உதவி காவல் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: சமூக நல அலுவலகம்

பணியிடம்: தென்காசி

காலியிடங்கள்: 07

பணி: மய்ய நிர்வாகி - 01
சம்பளம்: மாதம் 30,000

பணி: மூத்த ஆலோசகர் - 01
சம்பளம்: மாதம் ரூ.20,000

தகுதி:  சமூகப்பணி, உளவியல் துறையில் பணி அனுபவம் மற்றும் சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: தகவல் தொழில்நுட்ப பணியாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.18,000
தகுதி: கணினி அறிவியல் பிரிவில் பட்டம் பொறியியல் துறையில் பட்டம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: வழக்கு பணியாளர் - 02
சம்பளம்: மாதம் ரூ.12,000
சமூகப்பணி அல்லது உளவியல் பிரிவில் இளங்கலைப் பட்டமும் 1 ஆண்டு பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். 

பணி: இரவு காவலர் மற்றும் ஓட்டுநர் - 01
சம்பளம்: மாதம் ரூ.10,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: பல்நோக்கு உதவியாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.6,400
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: மாவட்ட சமூக நல அலுவலகம், சகி ஒருங்கிணைந்த சேவை மையம்,
தென்காசி

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.09.2021 

மேலும் விவரங்கள் அறிய tenkasi.nic.in அல்லது https://cdn.s3waas.gov.in/s37cbbc409ec990f19c78c75bd1e06f215/uploads/2021/08/2021083043.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

SCROLL FOR NEXT