வேலைவாய்ப்பு

ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் சம்பளத்தில் விளையாட்டு ஆணையத்தில் வேலை வேண்டுமா?

மத்திய விளையாட்டுத் துறை  அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய விளையாட்டு ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள 100 விளையாட்டு பயிற்சியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி

மத்திய விளையாட்டுத் துறை  அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய விளையாட்டு ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள 100 விளையாட்டு பயிற்சியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்.2600(204-1)SAI(/CD/2021(Vol.II)

பணி: Coach

காலியிடங்கள்: 100

சம்பளம்: மாதம் ரூ.1,05,000 - 1,50,000

வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: இந்திய விளையாட்டு ஆணையத்தில் அல்லது என்எஸ்/என்ஐஎஸ் போன்ற ஏதாவதொரு புகழ்பெற்ற விளையாட்டு பயிற்சி நிறுவனத்தில் டிப்ளமோ இன் கோச்சிங் முடித்திருக்க வேண்டும் அல்லது காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள விளையாட்டு பிரிவில் ஏதாவதொன்றில் சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:  நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம், தேதி போன்ற விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: www.sportsauthorityofIndia.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.10.2021

மேலும் விவரங்கள் அறிய www.sportsauthorityofIndia.nic.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகூரில் பூத்தவளே... ஜான்வி கபூர்!

வெள்ள இடர்பாடுகளில் ராணுவத்தின் மகத்தான சேவைக்குப் பாராட்டு!

ரூ. 45 லட்சம் செலவழித்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குச் சென்ற இந்தியர் சுட்டுக் கொலை! ஏன்?

பொறியியல் பணிகள்: விழுப்புரம் ரயில்கள் பகுதியளவில் ரத்து

சமூக வலைதளங்கள் முடக்கம்! போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! 5 பேர் பலி! | Nepal protest

SCROLL FOR NEXT