வேலைவாய்ப்பு

இந்திய வனத்துறையில் வேலை வேண்டுமா..? பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் (ICFRE) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி


இந்திய வனத்துறையில் நிரப்பப்பட உள்ள 45  வன பாதுகாவலர், துணை வன பாதுகாவலர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் (ஐசிஎஃப்ஆர்இ) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கேப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 45

நிறுவனம்: இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில்
பணி: Conservator of Forest
காலியிடங்கள்: 25

பணி: Deputy Conservator of Forest
காலியிடங்கள்: 20

தகுதிகள்: அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலைப் பட்டம்  பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://icfre.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்கு அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: 
Secretary, Indian Council of Forestry Research and Education,
P.O New Forest, Dehradun – 248006.

விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 30.05.2022

மேலும் விவரங்கள் அறிய https://icfre.gov.in/vacancy/vacancy620.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உறவில் முன்னுரிமை இந்தியாவுக்கே; பாகிஸ்தானுக்கு அல்ல! -அமெரிக்க அமைச்சர்

மந்தாரப்பூ... பிரியா பிரகாஷ் வாரியர்!

ஊஞ்சாலாடும் முகிலே... ஐஸ்வர்யா மேனன்!

மாணவர் சேர்க்கை இல்லாத 8,000 பள்ளிகளில் 20,817 ஆசிரியர்கள்: மத்திய கல்வி அமைச்சகம் அதிர்ச்சி தகவல்!

சுந்தரிப் பெண்ணே... பார்வதி!

SCROLL FOR NEXT