வேலைவாய்ப்பு

ரயில்வேத் துறையில் வேலை வேண்டுமா..?  உடனே விண்ணப்பிக்கவும்!

தென்மேற்கு ரயில்வே மண்டலத்தில் சரக்கு ரயில் மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


தென்மேற்கு ரயில்வே மண்டலத்தில் சரக்கு ரயில் மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

தென்மேற்கு ரயில்வேத் துறை மற்றும் சக்கர தொழிற்சாலை ஆகியவற்றில் வேலை செய்யும் பணியாளர்கள் மட்டும் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க முடியும். 

மொத்த காலியிடங்கள்: 145

பணி: மேலாளர்

தகுதி: தென்மேற்கு ரயில்வே மண்டலத்தின் பிரிவுகள், பணிமனைகள், தலைமையகம் போன்ற இடங்களில் பணிபுரியும் பணியாளர்களாக இருக்க வேண்டும். 

சம்பளம்: தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு 7 ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளின் 5 ஆவது பிரிவின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். 

வயதுவரம்பு: 18 முதல் 42க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழியில் நடத்தப்படும் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
 
விண்ணப்பிக்கும் முறை: https://www.rrchubli.in என்ற   இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.04.2022

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

இசையே முக்கியம்...

விவசாயம் சார்ந்த கதை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

பேல் பூரி

SCROLL FOR NEXT