வேலைவாய்ப்பு

இந்து அறநிலையத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிக்கலாம் வாங்க!

காஞ்சிபுரம் அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


காஞ்சிபுரம் அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: ஆகம ஆசிரியர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.30,000
தகுதி: ஏதாவதொரு வேத ஆகம பாட சாலையில் (வைணவம்) 5 ஆண்டுகளுக்குக் குறையாமல் ஆசிரியராகப் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  வைணவ ஆகமத்தில் தற்போதுள்ள வேத, ஆகம பாடசாலையில் 4 ஆண்டு பாடப்பிரிவில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். 

பணி: சமையலர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.12,000
தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 50க்கம் மேற்பட்ட நபர்களுக்கு உணவு தயாரிப்பதில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: சமையல் உதவியாளர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.10,000
தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் மற்றும் உணவு தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 

பணி: எழுத்தர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.10,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும். 

பணி: தலைமை ஆசிரியர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.35,000
தகுதி: தமிழ் பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றி பி.எட் முடித்திருக்க வேண்டும். மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:  https://hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சான்றொப்பம் செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.01.2022

மேலும் விவரங்கள் திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் சென்று தெரிந்கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனல் பறக்கும் கலைப்படைப்பு... பைசன் படத்தைப் புகழ்ந்த தயாரிப்பாளர்!

நான் பார்த்த மிகச் சிறந்த டெஸ்ட் தொடர் இதுதான்: இங்கிலாந்து பயிற்சியாளர்

தங்கம் ரூ.800 உயர்ந்த நிலையில் வெள்ளி கிலோவுக்கு ரூ.2,000ஆக உயர்வு!

சிபு சோரன் உடல் சொந்த ஊரில் தகனம்: லட்சக்கணக்கானோர் அஞ்சலி!

பங்கஜ் திரிபாதி மீது காதல்... மனம் திறந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா!

SCROLL FOR NEXT