சென்னை: வரும் 24 ஆம் தேதி நடைபெற உள்ள குரூப் 4 தேர்வுக்கான நுழைவுச் சீட்டை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ), தட்டச்சர், இளநிலை உதவியாளர், நில அளவையாளர் உள்ளிட்ட 7,382 பணியிடங்களுக்கு வரும் 24 ஆம் தேதி தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த தேர்வுக்கான நுழைவுச் சீட்டை இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
அதன்படி, தேர்வர்கள் www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களுடைய ஒருமுறை பதிவேற்ற மூலம் (ஓடிஆர்) கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.