வேலைவாய்ப்பு

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் இந்து அறநிலையத்துறையில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

திருச்சிராப்பள்ளி,  இந்து சமய அறநிலையத்துறை, உதவி ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர், அலுவலக உதவியாளர் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்

தினமணி



திருச்சிராப்பள்ளி,  இந்து சமய அறநிலையத்துறை, உதவி ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர், அலுவலக உதவியாளர் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: ஓட்டுநர் - 01
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். நல்ல உடல்தகுதி பெற்றிருக்க வேண்டும். 

பணி: அலுவலக உதவியாளர் 
காலியிடங்கள்: 09
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: 8 ஆம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் 32, எம்பிசி, பிசி,டிஎன்சி பிரிவினர் 34, எஸ்சி, எஸ்டி பிரிவினர் 37க்குள்ளும் இருக்க வேண்டும். இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
 
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளவாறு விண்ணப்பத்தை தயார் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: உதவி ஆணையர், உதவி ஆணையர் அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை, நீலகிரீஸ்வரர் தோப்பு, தெப்பக்குளத் தெரு, திருவானைக்காவல், திருச்சிராப்பள்ளி - 62005.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.04.2022
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளை ரோஜா... நேஹா ஷெட்டி!

ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப் அரைசதம்; இந்தியா 166 ரன்கள் முன்னிலை!

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

SCROLL FOR NEXT