வேலைவாய்ப்பு

ரயில்வே அமைச்சக நிறுவனத்தில் மென்பொறியாளர் வேலை வேண்டுமா?- உடனே விண்ணப்பிக்கவும்!

ரயில்வே அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் சிஆர்ஐஎஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மென்பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


ரயில்வே அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் சிஆர்ஐஎஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மென்பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Assistant Software Engineer
காலியிடங்கள்: 144
தகுதி: பொறியியல் துறையில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல், கம்பியூட்டர் டெக்னாலஜி, தகவல் தொடர்பியல், கணினி அறிவியல் மற்றும் தகவல் தொடர்பியல் டெக்னாலஜி பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்சிஏ முடித்திருக்க வேண்டும். 

பணி: Assistant Data Analyst(ADA)
காலியிடங்கள்: 06
தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக், எம்இ, எம்.டெக் தேர்ச்சி அல்லது கணிதம், புள்ளியியல், பொருளாதாரம் பிரிவில் முதுநிலைப் பட்டம் அல்லது எம்சிஏ முடித்திருப்பதுடன் கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 22 முதல் 27க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  

விண்ணப்பிக்கும் முறை: www.cris.org.in என்ற இணையதத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.05.2022

மேலும் விவரங்கள் அறிய www.cris.org.in என்ற இணையதத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோல்ட்ரிஃப் மருந்து உற்பத்தி நிறுவனம், மருத்துவர் மீது வழக்குப் பதிவு

பிக் பாஸ் 9: 20 போட்டியாளர்கள் - முழு விவரம்!

கத்தியுடன் தகராறில் ஈடுபட்ட இருவா் கைது

தண்டரை ஊராட்சியில் புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கக் கோரிக்கை

3 நாள்களில் ரூ. 235 கோடி வசூலித்த காந்தாரா சாப்டர் -1

SCROLL FOR NEXT