வேலைவாய்ப்பு

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வேண்டுமா?

கிருஷ்ணகிரி மாவட்டம் இந்து சமய அறநிலையத்துறையில் நிரப்பப்பட உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவுப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


கிருஷ்ணகிரி மாவட்டம் இந்து சமய அறநிலையத்துறையில் நிரப்பப்பட உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணியிடம்: கிருஷ்ணகிரி

பணி: அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்: 09

சம்பளம்: மாதம் ரூ.15,700 -  50,000

தகுதி:  எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி: இரவுக் காவலர் 

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.15,700 -  50,000

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 37 வயது மிகாதவராகவும் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளவாறு விண்ணப்பங்களை தயார் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
உதவி ஆணையர், இந்து சமய இறநிலையத்துறை, க.எண்.1/304-4, 3 -ஆவது குறுக்குத் தெரு, இராஜாஜி நகர், இராயக்கோட்டை ரோடு, கிருஷ்ணகிரி - 635 002.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.05.2022

மேலும் விவரங்கள் அறிய https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/124/document_1.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

SCROLL FOR NEXT