வேலைவாய்ப்பு

எல்லை சாலை பாதுகாப்பு கழகத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் எல்லை சாலை பாதுகாப்பு கழகத்தில் நிரப்பப்பட உள்ள 250 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் எல்லை சாலை பாதுகாப்பு கழகத்தில் நிரப்பப்பட உள்ள 250 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
1. ஆப்பரேட்டர் (கம்யூனிகேசன்) - 35
2.  எலக்ட்ரீசியன் - 30
3.  வெல்டர் - 24
4.  மல்டி ஸ்கில்டு வொர்க்கர் (பிளாக் ஸ்மித்) - 22
5.  மல்டி ஸ்கில்டு வொர்க்கர் (குக்) - 86
6.  டிராப்ட்ஸ்மேன் - 14
7.  ஹிந்தி டைப்பிஸ்ட் - 10
8.  சூப்பர்வைசர் - 29 

தகுதி : சூப்பர்வைசர் பணிக்கு மட்டும் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதர பணியிடங்களுக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

வயது வரம்பு: 26.9.2022  தேதியின்படி மல்டி ஸ்கில்டு வொர்க்கர் பணிக்கு 18 முதல் 25க்குள்ளும் இதர பணிகளுக்கு 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத்தேர்வு மற்றும் செய்முறைத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை : http://bro.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:  26.9.2022

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

SCROLL FOR NEXT